×

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவம் கொடி அணிவகுப்பு: துணை கமிஷனர் தொடங்கி வைத்தார்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடனான இறுதிகட்ட தொகுதி பங்கீட்டில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டங்களாக இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் என்று தெரிகிறது. வழக்கமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் பதற்றமான வாக்குச் சாவடிகள் எவை என மாநில தேர்தல் ஆணைய ஆலோசனை செய்து, துணை ராணுவப்படை வரழைக்கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டிற்கு கடந்த 1ம் ேததி முதல் கடந்த 7ம் தேதி வரையிலான நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து 25 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் 2 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். முதற்கட்டமாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள், சென்னை மன்ரோ சிலையில் இருந்து புறப்பட்டு, எஸ்.எம்.நகர், பாடிகாட் முனீஸ்வரன் கோயில், பல்லவன் இல்லம் வழியாக டாக்டர் சிவானந்தா சாலையில் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த கொடி அணிவகுப்பை திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தொடங்கி வைத்தார். துணை ராணுவத்தின் கொடி அணிவகுப்புடன் சென்னை மாநகர காவல்துறையில் இசை குழுவினரின் பேண்டு வாட்டியங்களுடன் மாநகர போலீசார் கலந்து கொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவம் கொடி அணிவகுப்பு: துணை கமிஷனர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Paramilitary Flag Parade ahead of ,Parliamentary Elections ,CHENNAI ,Election Commission of India ,Tamil Nadu ,Paramilitary Flag Parade ahead ,Parliament Elections ,Deputy Commissioner ,Dinakaran ,
× RELATED சென்னையில் வாக்கு இயந்திரங்கள்...